பிரித்தானியா ‘போர்க்கால நிலைமையை’ எதிர்கொள்ளும்! பட்ஜெட் பொறுப்புக்கான தலைவர் எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதால், பொருளாதார சரிவைத் தவிர்ப்பதற்காக நாட்டில் வணிகங்களுக்கு உதவி வழங்குவதாக கருவூலத்தின் தலைவர் உறுதியளித்துள்ளார்

வணிகங்களில் கொரோனா வைரஸின் தாக்கத்தைத் தடுப்பதற்கான வழியாக அதிக பொதுச் செலவுகள் மற்றும் கடன் வாங்குவதால் பிரித்தானியா 'போர்க்கால வணிக நிலைமையை' எதிர்கொள்ள நேரிடும் என்று பட்ஜெட் பொறுப்புக்கான அலுவலகத்தின் தலைவர் ராபர்ட் சோட் செவ்வாயன்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை நினைவு கூர்ந்த சோட், அரசாங்கம் அதிக கடனைப் பற்றி கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல என்று வலியுறுத்தினார்.

நிதியமைச்சர் ரிஷி சுனக் பொருளாதாரத்திற்கு உதவும் புதிய நடவடிக்கைகளை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த அறிக்கை வந்துள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெளிப்படுத்திய பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் , பொதுக்கூட்டங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும், சமூக தொடர்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2021 வசந்த காலத்தில் நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கக்கூடும் என்று பிரித்தானியா சுகாதார அதிகாரிகள் முன்பு எச்சரித்தனர்.

திங்களன்று நிலவரப்படி, பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று 1,395 உறுதிப்படுத்தப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்