பெற்றோரிடம் திருடிய திருடனின் படத்தை வரைந்த சிறுமி: பொலிசார் பாராட்டு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒரு தம்பதியரின் வீட்டிலிருந்து திருடன் ஒருவன் கொள்ளையடித்துச் செல்ல, அவனது படத்தை வரைந்து பொலிசாருக்கு உதவ முன் வந்திருக்கிறாள் ஒரு பத்து வயது சிறுமி.

Humbersideஐச் சேர்ந்த ஒரு தம்பதியர், தங்கள் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக புகாரளிப்பதற்காக பொலிஸ் நிலையம் வந்துள்ளனர்.

அவர்கள் நடந்த சம்பவம் குறித்து பொலிசாரிடம் விவரித்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களது பத்து வயது மகள் எலன், ஒரு காகிதத்தை எடுத்து படம் ஒன்றை வரையத் தொடங்கியுள்ளார்.

பெற்றோர் புகாரளித்து முடிக்கவும், அந்த படத்தை பொலிசாரிடம் கொடுத்த எலன், அந்த திருடன் இப்படித்தான் இருந்தான் என்று கூறியிருக்கிறாள்.

குழந்தையானாலும், அவள் அந்த படம் திருடனை பிடிக்க உதவும் என்று நம்புகிறாள். ஆகவே, குற்றச்செயல் ஒன்றைக் கண்டுபிடிக்க முயலும் பொலிசாருக்கு அவள் உதவ விரும்புவதை அறிந்த பொலிசார், அவளை உற்சாகப்படுத்துவதற்காக, அந்த படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

Credit: SWNS:South West News Service

இந்த படத்தில் காணப்படுபவருக்கு ஒத்த நபரைக் கண்டால் பொலிசாரிடம் தெரிவிக்குமாறு அவர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொலிசார் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இது எனது நண்பரின் மகள், குற்றவாளி என சந்தேகிக்கப்படுவரை வரைந்த படம்.

இவரைக் கண்டால் உடனடியாக பொலிசாருக்கு தகவலளியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

எலன் வரைந்த இந்த பிரயோஜனமுள்ள படம் குற்றவாளியை பிடிக்க நிச்சயம் பொலிசாருக்கு உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்