தயவு செய்து பீதியை ஏற்படுத்தாதீர்கள்... நிறுத்துங்கள்! பிரித்தானிய பெண் செவிலியரின் கண்ணீர் வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர் தயவு செய்து பீதியை ஏற்படுத்தாதீர்கள் என்று கண்ணீருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் 3,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 144 பேர் உயிரிழந்துள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக இது மாறி வருவதால், நாட்டின் பல நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் இருக்கும் பல்வேறு உணவங்களில் இருக்கும் கடைகளில் காய்கள் போன்ற அத்தியாவசிய தேவை பொருட்கள் விற்று தீர்ந்துவிடுகின்றன. இதனால் ஒரு பீதி ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், யார்க்கை சேர்ந்த Dawn Bilbrough என்ற 51 வயது பெண் செவிலியர் ஒருவர் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் வார்டில் 48 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு திரும்புகிறேன். காய் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வந்திருக்கிறேன். ஆனால் இங்கு ஒன்றும் இல்லை.

தயவு செய்து இப்படி பீதி ஏற்படுத்துவதை நிறுத்துங்கள். நான் இப்போது என்ன செய்வது? மிகவும் வேதனையாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்கள் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...