பிரித்தானிய சிறைச்சாலையில் கொரோனா ஊடுருவினால் காட்டுத்தீ போல பரவிவிடும்: நிபுணர்கள் எச்சரிக்கை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸானது பிரித்தானியா சிறைச்சாலைக்குள் ஊடுருவினால் காட்டுத்தீ போல் பரவக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

'சிறைச்சாலைகளில் நெரிசலான, ஆரோக்கியமில்லாத நிலைமைகள் மற்றும் தரமற்ற சுகாதார பராமரிப்பு ஆகிய காரணங்களினால் கோவிட் -19 வைரஸ் எளிதாக பரவி அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று think-tank நிறுவனம் எச்சரித்துள்ளது.

சிறையில் உள்ள நெரிசலை குறைப்பதற்கும், கொரோனா வைரஸ் வெடிப்பை எதிர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவுவதற்கும், குறுகிய தண்டனை பெற்ற நூற்றுக்கணக்கான கைதிகளை விடுதலை செய்யுமாறு அந்த நிறுவனம் அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் HMP மான்செஸ்டர் சிறைச்சாலையில் இருந்த ஒரு கைதிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, நிறுவனம் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் பிரித்தானிய சிறைகளில் ஊடுருவினால் வைரஸ் “காட்டுத்தீ போல் பரவக்கூடும்” என்று எச்சரித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்