லண்டன் பேருந்தில் பெண்களிடம் அத்துமீறிய நபர்! சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார்

Report Print Raju Raju in பிரித்தானியா
565Shares

லண்டன் பேருந்தில் பெண்களிடம் அத்துமீறிய நபரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

லண்டனின் Bexley பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் நபர் ஒருவர் பெண்களிடம் அத்துமீறும் செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் அவர் எதுமாதிரியான மோசமான செயல் செய்தார் என்ற முழு விபரத்தை வெளியிடாத பொலிசார் அவரின் சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சாம்பல், கருப்பு நிறத்தில் மேல் சட்டை அணிந்திருந்தார் எனவும் கையில் பை வைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு பொலிசார் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் நபர் அடிக்கடி அந்த பேருந்தில் பயணிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்