கடைகளில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை: பிரித்தானியர்கள் எடுத்துள்ள வித்தியாசமான நடவடிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1744Shares

கடைகளில் உணவுப்பற்றாக்குறை காணப்படும் நிலையில், தாங்களே தங்களுக்கான காய்கறிகளை பயிரிடும் திட்டத்தில் கூட இறங்கத் துணிந்துவிட்டார்கள் பிரித்தானியர்கள்!

கொரோனா பதற்றத்தால் மக்கள் ஒன்லைனில் பொருட்கள் வாங்க முடிவு செய்ததையடுத்து, ஒரே நாளில் ஒன்லைன் வர்த்தகம் 1,237 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

ஆனால், அவர்கள் அசாதாரண பொருட்களையெல்லாம் வாங்கத் துவங்கிவிட்டார்கள். ரொட்டி தயாரிக்கும் கருவிகள், வீட்டை பழுது பார்ப்பதற்கான கருவிகளும் ஜோராக விற்பனை ஆகின்றனவாம்.

நேற்றைய நிலவரப்படி, தக்காளி விதைகள், அதிகப்படியாக ஒரே நாளில் 1,237 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அதைத் தொடர்ந்து காய்கறிகளுக்கான உரம் 1,096 சதவிகிதம் அதிகம் விற்பனை ஆகியுள்ளது.

ஆளி விதை, சாலடுக்கான கீரைகள் முதலானவை முறையே 619, 432 சதவிகிதம் அதிகம் விற்பனையாகியுள்ளன.

சொல்லப்போனால், கொரோனாவால் வீட்டுக்குள் பதுங்கிவிட முடிவு செய்த மக்கள், உணவுப்பொருட்களை வீட்டிலேயே தயாரிப்பது முதல், உடற்பயிற்சி உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே உடற்பயிற்சி மையம் அமைப்பது வரை, தனிமைப்படுதலுக்கு தயாராகிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்