லண்டனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக சவக்கிடங்கு அமைப்பு! வெளியான முழு பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனின் Westminster-ல் தற்காலிக சவக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் லண்டனில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற முன்னேற்பாடு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இது செய்யப்பட்டுள்ளது.

அதன்படி Westminster Coroner’s Court அருகில் பெரிய வெள்ளை கூடாரத்தின் வடிவில் சவக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 112 சடலங்களை வைக்க முடிவும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய Westminster கவுன்சில் செய்திதொடர்பாளர், இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தேவையான அவசர காலத்திலேயே இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

ஆனால் இந்த சவக்கிடங்கு தேவைப்படாது என நாங்கள் நம்புகிறோம்.

Westminster மற்றும் கென்சிங்டன் மற்றும் செல்சியாவின் பெருநகரங்களில் இறந்த நோயாளிகளுக்கு இந்த சவக்கிடங்கு பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை 9 மணி உள்ளூர் நிலவரப்படி Westminsterல் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்