பிரித்தானியாவில் பல்பொருள் அங்காடிகள் முன் அலைமோதும் கூட்டம்: கட்டுப்படுத்த களமிறங்கிய பொலிசார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா அச்சம் தலைவிரித்தாடுகிறது, அதற்கு இணையாக பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

டெஸ்கோ பல்பொருள் அங்காடி ஒன்றின் முன் அமைந்துள்ள கார் பார்க்கிங் முழுமைக்கும் மக்கள் வரிசையில் நிற்பதை வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில் காணமுடிகிறது.

அதிகாலை 6 மணி முதலே, பலர் கடை முன் குவியத் தொடங்கியுள்ளனர்.

சில பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் முதியோர்கள் பொருட்களை வாங்குவதற்காக என தனியாக நேரம் ஒதுக்கியுள்ளனர்.

என்றாலும், சில சுயநலம் மிக்க இளைஞர்கள் முதியவர்களையும் தாண்டி பொருட்களை வாங்கிக் குவிக்க முண்டியடித்ததும் தெரியவந்துள்ளது.

சில இடங்களில் முதியவர்களை பொருட்களை வாங்கவிடாமல் சில சுயநலவாதிகள் பொருட்களை அள்ளிச்செல்ல முயல, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிசார் தலையிட வேண்டியதாயிற்று.

இன்னும் சில பல்பொருள் அங்காடிகள், கூட்டத்தை சமாளித்து, முதியவர்களும் நியாயமான முறையில் பொருட்களை வாங்க வசதியாக, தனியார் பாதுகாவலர்களை அமர்த்தியிருந்தன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...