உலகின் ஒவ்வொரு மரணத்திற்கும் சீனா தான் காரணம்! பிரித்தானியா பிரபலம் வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

உலகில் கொரோனா வைரஸால் விழும் ஒவ்வொரு மரணத்திற்கும் சீனா தான் காரணம் என்று பிரித்தானியா எழுத்தாளர் பகிரங்கமாக கூறியுள்ளார்.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் இப்போது உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக மாறி வருகிறது. இந்த நோய் காரணமாக தற்போது வரை உலகம் முழுவதிலும், 358,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 15,433 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. சீனாவின் வுஹான் நகரத்தில் பரவிய இந்த வைரஸ் இப்போது, உலகையே அச்சுறுத்தும் அளவிற்கு இருந்து வருகிறது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, இந்த வைரஸ் காரணமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது வரை மட்டும் இத்தாலியில் இந்த நோயால் 59,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5,476 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானியா நகைச்சுவை கலைஞரும், எழுத்தாளருமான Pat Condell, கொரோனாவில் கோரப்பிடியில் உலகம் சிக்கியதற்கு சீன அரசும் அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் You tube-ல் வெளியிட்டுள்ள வீடியோவில், வுஹான் நகரத்தில்தான் இந்த வைரஸ், முதன்முதலில் தோன்றியது. ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் இந்த விவகாரத்தை திறம்பட கையாண்டிருக்க வேண்டும்.

சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இந்த விவகாரத்தை மூடி மறைத்துவிட்டது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

இந்த வைரஸ் தொடர்பாக பேசியவர்களை எல்லாம் சீன அரசு கைது செய்தது. சீன அரசு வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகளை மறுத்துவிட்டது. அவர்கள் மக்களின் உயிர்களைவிட தங்களது முகத்தைக் காத்துக்கொள்ளத்தான் உறுதியாக இருந்தனர். உலகில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் நேரடி காரணம்.

உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவே இப்போது நெருக்கடி நிலையில் உள்ளது. சீன அதிபர் பொறுப்புடன் செயல்படவில்லை. வுஹான் நகரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அவர் எதையும் செய்யவில்லை.

மனித வாழ்க்கையைவிட முக்கியமான வேறு விவகாரங்களில் அவர் பிஸியாக இருந்திருக்கலாம் யாருக்குத் தெரியும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்குக் காரணம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் என உலக நாடுகளில் இருக்கும் மக்களுக்குத் தெரியும்.

இதை வுஹான் வைரஸ் என்று டிரம்ப் சொல்வது போல் சீனா வைரஸ் என்றுதான் அழைக்க வேண்டும். ஒரு விஷயத்தை அதன் சரியான பெயரில் அழைப்பதுதான் முக்கியம், இந்த விவகாரத்தை மறைத்தால் உலகமே முடங்கிவிடும் எனத் தெரிந்தும் மறைத்துள்ளனர்.

அவர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்களாவும், நேர்மையற்றவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் உலகின் பார்வையில் சீனாவைத் தலைகுனிய வைத்துவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...