பிரித்தானியார்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்புங்கள்! இல்லையெல் கடினம் என அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா

வெளிநாடுகளில் இருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக நாடு திரும்பும் படி கேட்டுக் கொள்வதாக வெளியுறவு செயலாளர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

தற்போது வரை இந்த நோயால் 335 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள், தங்கள் நாட்டின் எல்லைகளை மூடி வருகின்றன. அதோடு விமான சேவைகளையும் நிறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் Dominic Raab தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த தகவல் பிரித்தானிய மக்களுக்கு, உலகெங்கிலும் உள்ள எல்லைகள் மூடப்படுவதாலும், சர்வதேச பயணம் மிகவும் கடினமாகி வருவதாலும், இப்போது வெளிநாட்டில் இருக்கும் மக்கள் இங்கிலாந்துக்குத் திரும்புமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர், வெளிநாடுகளில் உள்ள இங்கிலாந்து பயணிகளை இப்போது நாடு திரும்புமாறு நாங்கள் கடுமையாக கேட்டுக்கொள்கிறோம்.

உலகெங்கிலும், அதிகமான விமான நிறுவனங்கள், விமானங்களை நிறுத்தி வைக்கின்றன. மேலும் விமான நிலையங்கள் மூடப்படுகின்றன, சில எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மூடப்படுகின்றன.

இங்கிலாந்து நாட்டினருக்கு ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்க எங்கள் ஊழியர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் வெளிநாட்டில் விடுமுறைக்கு சென்றிருந்தால், வீட்டிற்கு வர வேண்டிய நேரம் இது.அனைத்து பிரித்தானிய சுற்றுலா பயணிகள் மற்றும் குறுகிய கால பயணிகள் வணிக விமானங்கள் கிடைக்கும்போது திரும்பி வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

அடுத்த 48 மணி நேரத்தில் விமான வழித்தடங்களை மேலும் மூடுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறப்படுவதால், அவர் இப்படி ஒரு அவசர அறிவிப்பை தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...