பிரித்தானியா முடக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இதுவா? கைது செய்யப்பட்ட முதல் நபர்: முழு தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா மூன்று வாரம் முடக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ள நிலையில், திடீரென்று இந்த அறிவிப்பிற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிரித்தானியா 3 வாரம் முடக்கப்படுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

பிரதமரின் இந்த முடிவிற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்தும், இதற்கு முன் விதியை மீறிய நபருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்தும் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் மிகப் பெரிய கொடிய நோயாக கொரோனா மாறி வருவதால், அதன் நிலையை உணர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன், இதற்கு முன்பு சில கட்டுப்பாடுகளை அறிவித்தார்.

ஆனால், நோயின் தாக்கம், அதன் பரவல் குறித்து அறியாத மக்கள், அதை அசாதரணமாக எடுத்துக் கொண்டு, கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், வார இறுதி நாட்களில் பூங்காங்களில் கூடுவதும், வீதிகளில் ஒன்று கூடி கூத்தடிப்பதுமாக இருந்தனர்.

இது குறித்து அமைச்சர்கள் மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்கள் எத்தனை முறை கூறியும், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் கடந்த திங்கட்கிழமை அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், முடக்கப்படும் விஷயத்தை அறிவித்தார் போரிஸ் ஜான்சன்.

அதையும் சாதரணமாக அறிவித்தால், மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

  • அதில், முக்கியமாக ஷாப்பிங் செய்வது(தேவைக்கு மட்டுமே, இல்லையேன்றால் கவனிக்கப்படுவிர்)
  • இந்த மூன்று வாரத்தில் நாள் ஒன்றிற்கு ஒரு முறை மட்டுமே உறவினர் அல்லது தனியாக வெளியே வர வேண்டும்.(இதில் உடற்பயிற்ச்சி செய்வது அடங்கும்)
  • தேவை என்றால் மட்டுமே வேலைக்கு பயணம் செய்ய வேண்டும்.
  • மருத்துவ உதவி வழங்க வெளியில் செல்லலாம்.
  • இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் கூடக் கூடாது போன்ற விதிகளை கொண்டு வந்துள்ளார்.
  • இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் Isle of man-ல் இருந்த வந்த பிரித்தானியாவை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க நபர் சுயமாக தனிமைப்படுத்த தவறியதால் கைது செய்யப்பட்டார்.

கட்டுப்பாடுகள் மற்றும் விதியை மீறியதற்காக கைது செய்யப்பட்ட முதல் பிரித்தானியர் இவர் தான் என்று நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள நபர், மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 டொலர் அபராதம் விதிக்கப்படலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய விதிகளை கடைபிடிக்கத் தவறியதற்காக தற்போது ஒரு ஆண் பொலிஸ் காவலில் உள்ளார்.

தயவுசெய்து அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சமூகத்தின் பாதுகாப்பு குறித்து சிந்தியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இனி வரும் நாட்களில் சட்டம் கடுமையாக்கப்படலாம் என்பதால், மக்கள் சற்று கவனமுடனே, அசாதாரணமாக இருக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...