லண்டனில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்த ஊழியர்! அவரின் பரிதாப நிலை

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சையளிக்கும் ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியரை அவர் வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

பிரித்தானியாவில் National Health Service-ல் ஊழியராக பண்புரிபவர் ஜோசப் ஹோர்.

இவர் லண்டனில் உள்ள ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் நோயாளிகளுக்கு முதலுதவி அவசர சிகிச்சைகளை மேற்கொள்வார். தற்போது கொரோனா நோயாளிகளுக்கும் அவர் சிகிச்சையளித்து வருகிறார்.

இந்நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஜோசப்பை வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

அதாவது ஜோசப் மூலம் தனக்கும் வீட்டருகில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற பயத்திலேயே வீட்டு உரிமையாளரான அப்பெண் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து ஜோசப் கூறுகையில், எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பி வீட்டிலிருந்து வெளியேறும்படி உரிமையாளர் கூறினார்.

இதன் காரணமாக நாளை எனது 12 மணிநேர இரவு ஷிப்டில் வேலை செய்ய முடியாது.

இதோடு இந்த வார இறுதி ஷிப்டிலும் என்னால் பணியாற்ற முடியாது என்ற சூழல் உள்ளது என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்