இருமி.. இருமி.. வயதான தம்பதியினரை மிரட்டிய பிரித்தானிய இளைஞர்கள் கைது

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் வயதான தம்பதியினரை இருமல் மூலம் மிரட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகையே கதிகலங்க வைத்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் பொது இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அரசாங்கள் மற்றும் சுகாரதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் ஹிட்சினில் உள்ள பூங்காவில் வயதான தம்பதியினர் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அவர்களை வழிமறித்த 3 இளைஞர்கள் தொடர்ந்து அவர்களின் முகத்திற்கு முன்னால் இருமி சங்கடத்திற்குள்ளாகியுள்ளனர்.

அவ்வழியாக சென்ற ஒருவர் இளைஞர்களை தட்டிகேட்க அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.

இதில், 70 வயதான பெண்ணுக்கு கண்களில் ஒன்றில் சிராய்ப்பு ஏற்பட்டது மற்றும் அவரது வாகனம் சேதமடைந்தது. அவர் சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், இப்போது அவரது குடும்பத்தினருடன் வீட்டில் குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தட்டிகேட்ட 30 வயதான நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 16,18 மற்றும் 19 வயதுடைய 3 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம், அது நடைபெற்று வரும் விசாரணையை பாதிக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்