பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு உதவும் இராணுவத்தினர்!

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அளிக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் பாதுகாப்பு உபகரணங்களை அளிக்கும் பணியை கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் செய்து வருகிறார்கள் என National Health Service தெரிவித்துள்ளது.

அதாவது National Health Service ஊழியர்கள் 4000 பேர் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தாங்கள் அணியும் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது என பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதினார்கள்.

இதையடுத்தே உபகரணங்கள் துரிதமாக இராணுவத்தினர் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

முகத்தில் அணியும் மாஸ்க் பற்றாக்குறை நிலவுவதாக கடந்த வாரம் பராமரிப்பு இல்ல ஊழியர் ஒருவர் கூறியிருந்தது முக்கிய விடயமாகும்.

இது தொடர்பில் National Health Service நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி Emily Lawson கூறுகையில், மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அளிக்கும் சேவையில் ஈடுபடும் இராணுவத்தினருக்கு நன்றிகள்.

இந்த சூழ்நிலையில் அதன் தேவை அதிகளவு உயர்ந்துள்ளது.

அனைவரும் இணைந்து பணியாற்றுவது கொரோனாவை எதிர்கொள்ள பெருமளவில் உதவும் என கூறியுள்ளார்.

சுகாதார செயலர் Matt Hancock கூறுகையில், தேவைப்படும் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்காக நாடு முழுவதும் லொறிகள் வலம் வருகிறது என்பதை உறுதி செய்கிறோம்.

இதன் மூலம் கொரோனாவை எதிர்த்து போராட முடியும் என கூறியுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...