அம்மா நான் இறந்துருவேனா? கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன்: பிரித்தானியரின் நொறுங்க வைக்கும் பதிவு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தாயார் ஒருவர் முற்றிலும் ஆரோக்கியமான தமது 5 வயது மகன் கொரோனா வியாதிக்கு இலக்கானது தொடர்பில், எஞ்சிய தாய்மார்களை எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவின் வொர்செஸ்டர்ஷைர் பகுதியில் குடியிருக்கும் 30 வயதான Lauren Fulbrook என்பவரே தமது 5 வயது மகன் ஆல்ஃபி கொரோனாவால் பாதிக்கப்பட்டது தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருந்த ஆல்ஃபியின் உடல்நிலை திடீரென்று மாறியதாகவும் காய்ச்சல் 42C அளவுக்கு எகிறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பிரமை பிடித்த நிலையில் தமது மகன் காணப்பட்டதாகவும், கூடவே வாந்தியும் இருந்தது என்கிறார் லாரன்.

மருத்துவமனை படுக்கையில் ஆதரவற்ற நிலையில் படுத்திருக்கும் தமது மகனின் உயிர் மீது தமக்கு அச்சம் எழுந்துள்ளதாகவும் லாரன் தமது பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

படுத்தப் படுக்கையாக இருந்தபடியே, அம்மா நான் செத்திருவேனா என தமது மகன் கேட்ட கேள்வி இன்னும் என்னால் மறக்க முடியவில்லை எனவும் லாரன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் விளையாட்டல்ல என பதிவு செய்துள்ள லாரன், பிரித்தானியர்கள் கண்டிப்பாக அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமது 5 வயது மகன் ஆல்ஃபி சாப்பிட பிடிக்காமல், எதுவும் அருந்தாமல், சிறுநீர் கூட கழிக்காமல் படுத்தப் படுக்கையாக கிடப்பது கண்டால் தாங்கமுடியவில்லை என்கிறார் லாரன்.

மார்ச் 16 ஆம் திகதி திங்கள் அன்று ஆல்ஃபி முதன்முதலில் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியபோது, தனது வாழ்க்கையின் மோசமான அனுபவம் என லாரன் அதை விவரித்துள்ளார்.

தமது மகனின் இரத்தத்தில் சர்க்கரை அளவு 3.7 மட்டுமே இருந்தது எனக் கூறும் லாரன், அவனது இதய துடிப்பு 180 என பதிவானது.

ஆனால் வியர்வை கொட்டியபடியே இருந்தது, தமது மகன் நடுக்கத்தில் இருந்து மீளவில்லை என கூறும் லாரன், மூச்சுத் திணறலால் கடுமையாக அவஸ்தைக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கவனத்திற்காகவோ அனுதாபத்திற்காகவோ இதை நான் பதிவு செய்யவில்லை எனக் கூறும் லாரன்,

கொரோனா தொடர்பில் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டிப்பாக உடன்படுங்கள், உங்களுக்காக மட்டுமல்ல, உங்களின் உறவினர்களுக்காகவும் செய்யுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...