தீவிரமடையும் கொரோனாவால் அதிகரித்த பயம்: விபரீத முடிவெடுத்த இளம்பெண்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கொரோனா தன்னையும் தாக்கிவிடுமோ என்கிற அச்சத்தில் தற்கொலைக்கு முயற்சித்த பிரித்தானிய இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொடிய கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பாரிய பேரழிவினை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை ஒவ்வொரு நாடுகளும் விதித்துள்ளன.

அதிலும் குறிப்பாக அதிக பாதிப்புகளை சந்தித்திருக்கும் நாடுகள், மக்களை வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும், வெளியில் வர வேண்டாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த 19 வயதான எமிலி ஓவன் என்கிற இளம்பெண், வீட்டிலேயே முடங்கி இருந்ததால் பெரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் தன்னையும் தாக்கி தனிமைப்படுத்திவிடுமோ என்கிற அச்சத்திலே இருந்த அவர், கடந்த 18ம் திகதியன்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர், ஞாயிற்றுக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அவருடைய குடும்பத்தினர், தொற்றுநோய்களின் போது மனநலப் பிரச்சனைகளுடன் போராடும் மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வையும் ஆதரவையும் வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...