இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா உறுதி! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் சார்லஸிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் தற்போது வரை மட்டுமே, 8,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 422 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இளவரசர் சார்லஸிற்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக Clarence House தெரிவித்துள்ளது.

71 வயதான இளவரசர் சார்லஸ் லேசான அறிகுறிகளுடன் இருக்கிறார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

GETTY IMAGES

மேலும் மனைவியான Camilla(Duchess of Cornwall)-க்கு சோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு வைரஸ் அறிகுறி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்லஸ் மற்றும் கமிலா இப்போது ஸ்காட்லாந்தில் உள்ள Balmoral-வில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இளவரசருக்கு இந்த நோய் யாரிடமிருந்து பரவியது என்பது குறித்து தெரியவில்லை.

மேலும் பக்கிங்ஹாம் அரண்மனை, கடந்த 12-ஆம் திகதி அன்று தான் மகராணியார் மகனும், இளவரசருமான சார்லஸை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளது.

ராணியார், அவரது நலன் தொடர்பாக பொருத்தமான அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

Clarence House வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்க மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு இணங்க, இளவரசரும், அவரது மனைவியும் இப்போது ஸ்காட்லாந்தில் இருக்கும் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

சோதனைகள் Aberdeenshire-ல் இருக்கும் NHS-ஆல் மேற்கொள்ளப்பட்டன. அங்கு சோதனைகளுக்கு தேவையான அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டன.

இளவரசர் சமீபத்திய வாரங்களில் பொதுவெளியில் அதிக எண்ணிக்கையிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், யாரிடமிருந்து வைரஸ் பரவியது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்