லண்டனில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த மருத்துவமனையில் இளம் செவிலியர் தற்கொலை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த லண்டன் மருத்துவமனையில், இளம் செவிலியர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள கிங் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 20 வயதான இளம் செவிலியர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

திங்கள்கிழமை மாலை 5.36 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) பொலிசார் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குள் செவிலியர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடியும், பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கொடிய கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 8 நோயாளிகள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை எனவும், அறிக்கை தயார் செய்யப்படும் என பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான கொரோனா வைரஸ் நோயாளிகள், லண்டனில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் பதிவாகியுள்ள 8,077 நோயாளிகளில் 2,872 பேர் லண்டனில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்