கொரோனாவுக்கு இடையே பிரித்தானியாவை நடுங்க வைத்த 7 வயது சிறுமி விவகாரம்: வெளியான முதல் புகைப்படம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
2071Shares

பிரித்தானியாவில் பெற்றோர் கண் முன்னே கொடூரமான முறையில் கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

போல்டன் நகரில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிலேயே சிறுமி எமிலி ஜோன்ஸ் குற்றுயிராக மீட்கப்பட்டார்.

அன்னையர் தினத்தன்று குடும்பத்துடன் பொழுதினை போக்க பூங்காவுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரால் சிறுமி எமிலி ஜோன்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினரால் சிறுமி எமிலியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இதனிடையே சம்பவப்பகுதியில் வைத்தே சிறுமி எமிலியை கத்தியால் தாக்கிய அந்த 30 வயது பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தற்போது அவர் உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரே ஒரு மகளைப் பறிகொடுத்த பெற்றோர் கலங்கிப் போயுள்ளனர்.

இந்த இழப்பை எப்படித் தாங்குவது என தெரியவில்லை எனக் கூறும் அவர்கள், எமிலி எப்போதும் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதை விட வெளியே செல்லவே ஆசைப்படுவார்.

தற்போது அதுவே வினையாக முடிந்துள்ளது என்கிறார்கள் எமிலியின் பெற்றோர். எமிலி இல்லாத உலகம் வெறுமையாக உள்ளது என கூறும் அவர்கள்,

இந்தக் கொலைச் சம்பவம் ஏன் நடந்தது என்பதை இதுவரை எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என கண்கலங்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த வேளையில் பூங்காவில் எங்களுக்கு உதவிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்,

மேலும் எமிலியைக் காப்பாற்றுவதற்காக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்த அவசர சேவைகளுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர் எமிலியின் பெற்றோர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்