கொரோனா அச்சுறுத்தல்: 10முக்கிய அருங்காட்சியகங்களை மருத்துவமனைகளாக மாற்றும் பிரித்தானியா அரசு!

Report Print Abisha in பிரித்தானியா

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரித்தானிய அரசு 10 முக்கிய அருங்காட்சியகங்களை மருத்துவமனைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக sky news செய்தி வெளியிட்டுள்ளது.

பித்தானியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், சூப்பர்மார்கெட்கள், ஓட்டல்கள் ஆகியவை மருத்துவமனைகளாக மாற்றும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது 10 முக்கிய அருங்காட்சியகங்களை மருத்துவமனைகளாக மாற்ற அரசு திட்டமிட்டு செயலாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக நோயை கட்டுப்படுத்த ஐந்து இடங்களில் இராணுவம் முகாங்கள் அமைத்து தீவிர பணியை மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்து முக்கிய நகரங்களான Manchester, Birmingham,Newcastle ஆகிய இடங்களை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அதில் குறிப்பிட்ட எந்த இடத்தில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

The London ExCel centre-ல் இரண்டு பாகங்களாக பிரித்து ஒன்றில் 2000 படுக்கைகள் வீதம் அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிழக்கு லண்டலில் உள்ள அருங்காட்சியை என்.எச்.எஸ் நைட்டிங்கேல் மருத்துவமனை என மறுபெயரிட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் செவ்வாயன்று தெரிவித்தார்.

அந்தவகையில், ஒவ்வொரு மருத்துவமனையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும்.இவற்றில், இராணுவ மருத்துவர்கள் நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்