கொரோனா அச்சம்: வீட்டுக்கு அருகில் இருந்துகொண்டே ஆப்பிரிக்காவில் இருப்பதாக மகளிடம் பொய் சொல்லும் தந்தை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

உயிரைப் பிரித்த கோரம் போதாதென, உறவுகளையும் பிரித்து வைத்து வேடிக்கை பார்த்து மகிழ்கிறது இந்த கொடிய கொரோனா வைரஸ்.

மருத்துவமனைகளில் பணி புரியும் செவிலியர்கள் பாதுகாப்பு உடை அணிந்துகொண்டு, தூரத்தில் நின்று குழந்தையைப் பார்த்து கையை ஆட்ட, அது தன் அம்மாதானா என்று கூட தெரியாமலே கை காட்டி கதறிய குழந்தைகளைக் கண்டோம்.

இறந்துபோன தந்தையின் உடலைக் கூட தொட முடியாமல் தூர நின்று கதறும் மகளைக் குறித்த செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தந்தை ஒருவர் வீட்டுக்கு சற்று தொலைவில் மறைந்து இருந்துகொண்டே, தன் மகளிடம் தான் ஆப்பிரிக்காவில் இருப்பதாக தெரிவிக்கவேண்டிய சூழலுக்கு ஆளாகியிருக்கிறார் இந்த கொரோனாவால்.

வேல்ஸைச் சேர்ந்த Dr Julian Bayliss ஒரு சுற்றுச்சூழல் பாதுகாவலர். பெரும்பாலும் ஆப்பிரிக்காவிலேயே பணியாற்றிய அவர் எத்தியோப்பியாவில் இருந்தபோது, தன்னுடன் தொடர்பிலிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்றிய விடயம் தெரியவந்திருக்கிறது.

ஆகவே, வேல்ஸ் திரும்பிய Dr Julian, தனது வீட்டிலிருந்து 300 மீற்றர் தொலைவில் தனது வாகனத்துடன் கூடாரம் ஒன்றை இணைத்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கிறார்.

அதற்கு முக்கியக் காரணம் Dr Julianஇன் செல்ல மகள் பாப்பி.ஒரு வேளை தனக்கு கொரோனா இருந்தால், அது தன் மகளுக்கும் குடும்பத்தினருக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் அவர்.

மகன் தனித்திருக்கும் நிலையில், Dr Julianஇன் தாய் தினமும் தன் மகனுக்காக உணவு கொண்டு தூரத்தில் வைத்துவிட்டு, அவரை தொலைவிலிருந்து பார்த்துவிட்டுப் போகிறார்.

மகளுடன் அவ்வப்போது Dr Julian வீடியோ அழைப்பில் மட்டும் பேசிக்கொள்ள, அவர் இன்னமும் ஆப்பிரிக்காவில் இருப்பதாகவே எண்ணிக்கொண்டிருக்கிறாள் பாப்பி.

BBC

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்