கொரோனா அச்சத்தால் பிரித்தானிய மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பகல் முழுவதும் நோயாளிகளுக்காக உழைத்து களைத்து வீடு திரும்பிய பிரித்தானிய மருத்துவர் ஒருவருக்கு, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான ஒரு பெண் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்றை வைத்திருந்தார்.

Wirralஐச் சேர்ந்த மருத்துவரான Joseph Alsousou, Oxfordஇல் இருக்கும் இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்.

Wirralஇலிருந்து Oxford சுமார் 180 மைல் தூரத்தில் அமைந்துள்ளது என்பதால், அருகில் இருக்கும் Headington என்ற இடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார் Joseph.

ஒரு நாள் பணி முடிந்து களைத்துப்போய் வீடு திரும்பிய Josephஇடம், அவரது வீட்டு உரிமையாளர் தயவு செய்து வீட்டை காலி செய்து போய்விடுங்கள்.

நீங்கள் மருத்துவமனையிலிருந்து வருவதால், ஒருவேளை நீங்கள் கொரோனா வைரஸைக் கொண்டு வரக்கூடும்.

LDRS

அது எனக்கு பரவிவிட்டால் கஷ்டம், தயவு செய்து வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம் அந்த பெண்.

கண்ணீருடன் பொருட்களை அள்ளி காரில் போட்டுக்கொண்டு, 180 மைல் பயணித்து தன் சொந்த வீடு இருக்கும் Wirralக்கு திரும்பியிருக்கிறார் Joseph.

தினமும் அவ்வளவு தூரம் பயணிப்பது கஷ்டம் என்பதால் வீடு தேடும் வேட்டையில் Joseph இறங்க, அவருக்கு பதில் அவரது சக மருத்துவர்கள் அவரது ஷிஃப்டை பார்த்திருக்கிறார்கள்.

ஒருவழியாக Horspath என்ற இடத்தில் வீடு ஒன்று கிடைக்க, தற்போது அங்கே குடியேறியிருக்கிறார் Joseph.

முந்தின வீட்டு உரிமையாளர் Josephஐ வீட்டை விட்டுத் துரத்த, இந்த வீட்டு உரிமையாளரான பெண்ணோ, இதுமாதிரியான நேரத்தில் என் வீட்டில் ஒரு மருத்துவர் தங்கியிருப்பது என் பாக்கியம் என்கிறாராம்.

JOSEPH ALSOUSOU

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...