பிரித்தானியாவுக்குள் கொரோனா பரவ இந்த நாடுதான் காரணமாக இருக்கும்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஜனவரி 31ஆம் திகதிதான் முதன்முதலில் பிரித்தானியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறியப்பட்ட நிலையில், உண்மையில் அதற்கு சில வாரங்கள் முன்பே பிரித்தானியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இதுவரை பெரிய அளவில் அடிபடாத ஒரு நாட்டின் பெயர் தற்போது சர்ச்சைக்குள்ளாகத் தொடங்கியுள்ளது.

ஆம்! பிரித்தானியர் ஒருவர் ஆஸ்திரியாவிலுள்ள மதுபான விடுதி ஒன்றிலிருந்து கொரோனாவைக் கொண்டுவந்ததாக அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு சசெக்சிலுள்ள Maresfield என்ற பகுதியைச் சேர்ந்த Daren Bland (50) என்ற பிரித்தானியர், தனது மூன்று நண்பர்களுடன் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஆஸ்திரியாவில் பனிச்சறுக்கு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

Kitzloch மதுபான விடுதி என்ற விடுதியில் நடைபெற்ற அந்த பார்ட்டியில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஆட்டமும் பாட்டமுமாக நேரத்தை செலவிட்டிருக்கிறார்கள். பார்ட்டி முடிந்த வீடு திரும்பிய Bland 10 நாட்கள் உடல் நலமில்லாமல் இருந்திருக்கிறார். அவரிடமிருந்து அவரது குடும்பத்திற்கு நோய்த்தொற்று பரவியுள்ளது.

அதன் பிறகு அவரது அயலகத்தாருக்கு தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. Blandக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவரது குடும்பத்தாருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.

அவர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படுமானால், அதன் பொருள், பிரித்தானியாவில் கொரோனா நுழைந்ததாக தற்போது கருதப்படும் காலகட்டத்திற்கு ஒரு மாதம் முன்னரே அது பிரித்தானியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்பதாகும்.

Blandஉடன் இருந்த மூன்று நண்பர்களில் இருவர் டென்மார்க்குக்கும் ஒருவர் உடல் நலம் குன்றி அமெரிக்காவின் மின்னசோட்டாவுக்கும் சென்றுள்ளனர்.

Kitzloch மதுபான விடுதியில், பெப்ரவரி மாத இறுதியில் ஜேர்மானியரான ஊழியர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் நோய்வாய்ப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரியாவின் Ischgl நகரிலிருந்து வீடு திரும்பிய ஸ்கேண்டினேவியா, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவின் பிற பகுதிகளிலுள்ள சுறுலாப்பயணிகளுக்கு அதன் பின் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

ஜேர்மனி, ஆஸ்திரியாவின் Ischgl நகரிலுள்ள Kitzloch மதுபான விடுதியை கொரோனா இனப்பெருக்கம் செய்யும் இடம் என விமர்சித்துள்ள நிலையில், உள்ளூர் அதிகாரிகள் தொற்று குறித்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்துள்ள விடயம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா தொழில் பாதிக்குமென்பதால் அவர்கள் தொற்று குறித்து தகவல் கொடுக்காமல் அமைதியாக இருந்தார்களா என்ற கோணத்தில் ஆஸ்திரிய விசாரணை அதிகாரிகள் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளனர்.

'Ibiza of the Alps' என்று அழைக்கப்படும் Ischgl நகரம், ஐரோப்பா முழுவதும் கொரோனாவை பரப்பியதற்காக கடும் விசாரணைக்குட்பட இருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...