என் கண்முன் அவர்கள் இறந்தனர்! லண்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் கண்ட காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தன் கண்முன்னே இரண்டு பேர் உயிரிழந்ததை பார்த்ததாக வேதனையுடன் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கொரோனா வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லண்டனின் Rotherhithe-ஐ சேர்ந்த Jozef Wallis என்பவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உணர்ந்துள்ளார். இதன் காரணமாக மூட்டுகளில் வலி, லேசான தலைவலி, ஒரு குறிப்பிட்டத்தக்க காய்ச்சல் போன்ற அறிகுறிகளை எல்லாம் கண்டுள்ளார்.

(Picture: Jozef Wallis)

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர் உடனடியாக கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சத்தில், NHM அமைப்பதை தொடர்பு கொள்ளாமல், தனியார் மருத்துவரிடம் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டார். அதன் பின் St Thomas மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது அவர் தன்னுடைய வார்டில், இரண்டு நோயாளிகள் தன் கண்முன்னே இறந்ததாக பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி மெய்லுக்கு கூறியுள்ளார்.

(Picture: Jozef Wallis)

ஒரு வயதானவர் சுவாசிப்பதற்கு சிரமபப்பட்டார், நான் அவரை மீண்டும் பார்க்கவிரும்பவில்லை என்ற போது, செவிலியர் ஒருவர் இறந்துவிட்டதாக கூறினார்.

மற்றொரு நபர் தீவிர சிகிச்சை பிரிவிற்குள் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அதை நினைத்து பார்க்க முடியவில்லை.

அவர் வயதானவர் மற்றும் பிற மருத்துவ நிலைமைகளைக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஒருவரின் தாத்தாவோ அல்லது, ஒருவரின் அப்பாவோ, ஒருவரின் கணவரையோ நிச்சயம் தவறவிடுவார் என்பது மட்டும் எனக்கு தெரிந்தது.

இதனால் Jozef Wallis வைரஸ் பரவுவது தெரியாது, அது அப்படியே மெதுவாக நம்முள் வந்துவிடுகிறது. அனைவரும் வீட்டிற்குள்ளே இருங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இவர் இணையத்தில் கொரோனா அறிகுறிகள் குறித்து ஆராய்ந்து பார்த்துள்ளார். அதன் பின்னர் தனக்கு அந்த அறிகுறிகள் இருப்பதாக நம்பிய இவர், எட்டு நாட்களுக்குப் பிறகு ஒரு தனியார் மருத்துவ சேவையைத் தொடர்பு கொள்ள முடிவு செய்தார்.

(Picture: Jozef Wallis)

அதன் பின், அவர் St Thomas மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அங்கு சோதனை நேர்மறையாக இருந்தால் உடனடியாக,ஒரு கொரோனா வைரஸ் வார்டுக்கு மாற்றப்படுகின்றனர். Jozef Wallis-க்கு நிலைமையின் தீவிரம் தெரியும், ஆனால் இறந்து விடுவேன் என்று நினைத்ததே இல்லை எனவும் தைரியமாக இருந்ததாகவும், ஆனால் மற்ற இரண்டு நோயாளிகள் என் கண் முன் இறந்ததை நினைக்கும் போது வேதனையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Jozef Wallis ஐந்து நாட்கள் மருத்துவமனையில் கழித்த பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்போது மனைவி குழந்தைகளை பார்த்தாலும், வீட்டில் தனிமையில் இருக்கிறார். அவர் குடும்பத்தின் மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இவர், மருத்துவமனை ஊழியர்களை பாராட்டினார். ஆனால் பிந்தைய பராமரிப்பு, குறிப்பாக எவ்வளவு காலம் சுயமாக தனிமைப்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகள் தனக்கு கொஞ்சம் குழப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்