லண்டனில் கொரோனா வைரஸ் இருப்பதாக பொலிசார் முன்னிலையில் இருமிய நபர் கைது!

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் முன்னாள் மனைவியை தாக்கிய நபர் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கூறி பொலிசார் முன்னர் இருமிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனின் Dagenham-ஐ சேர்ந்தவர் Darren Rafferty (45).

இவர் கடந்த திங்கட்கிழமை மதியம் 1.30 மணிக்கு மது அருந்திவிட்டு தனது முன்னாள் மனைவி Kerry Manning-ஐ பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் Kerry காலில் அடித்த Darren அவர் தோள்பட்டையில் கத்தியால் வெட்டினார்.

இதனால் Kerry காயமடைந்த நிலையில் சம்பவம் குறித்த தகவலின் பேரில் மூன்று பொலிசார் அங்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் கடுமையாக இருமிய Darren தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறினார்.

இதன்பின்னர் பொலிசார் அவரை கைது செய்தார்கள், காயமடைந்த Kerry மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Darrenக்கு உண்மையில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற விடயம் உறுதியாக இன்னும் தெரியவில்லை.

இதனிடையில் மனைவியை தாக்கியது மற்றும் பொலிசார் மீது இருமியது உள்ளிட்ட வழக்குகள் Darren மீது பதியப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து Darren-ஐ நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் அவருக்கான தண்டனை விபரத்தை ஏப்ரல் 1 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...