பரவும் கொரோனா வைரஸ்... அரசின் விதிமுறைகளை மீறினால் கடும் சிக்கல்: பிரித்தானியாவில் இறுகும் சட்டம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அமுலில் இருக்கும் விதிமுறைகளை மீறும் பிரித்தானியர்கள் கைது அல்லது பிழை செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம் என தெரியவந்துள்ளது.

உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு உடன்படாத நபர்களுக்கு 60 பவுண்டுகள் பிழையாக விதிக்கப்படும், 14 நாட்களுக்குள் பிழை தொகையை செலுத்துவதாக இருந்தால் அது 30 பவுண்டுகளாக குறைக்கப்படும்.

இரண்டாவது முறையும் விதிமுறைகளை மீறும் பிரித்தானியருக்கு 120 பவுண்டுகள் பிழையாக விதிக்கப்படும், இதே நிலை நீடித்தால் அதிகபட்சமாக 960 பவுண்டுகள் வரை பிழை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிழை தொகையை செலுத்த மறுக்கும் நபர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் புதிய சட்டத்தில் இடம் உள்ளது.

பொலிஸ் அதிகாரிக்கு உங்கள் பெயரையும் முகவரியையும் கொடுக்கத் தவறினால் அது புதிய அதிகாரங்களின் கீழ் கைது செய்யக்கூடிய குற்றமாகும்.

இந்த காரணங்களுக்காக பிரித்தானியர்கள் வெளியே செல்லலாம்:

  • உணவு வாங்க, மருந்து, செல்லப்பிராணிகளின் உணவுக்காக
  • உடற்பயிற்சிக்காக
  • மருத்துவ உதவி நாடி செல்லலாம்
  • உடல் நலம் குன்றியவர்களுக்கு உதவ செல்லலம்
  • ரத்த தானம் செய்ய செல்லலாம்
  • வேலைக்காக பயணிக்க அல்லது தன்னார்வ அல்லது தொண்டு சேவைகளை வழங்க செல்லலாம்
  • குடும்ப உறுப்பினர்களின் இறுதிச்சடங்குக்கு செல்லலாம்
  • நீதிமன்றத்தில் ஆஜராக அல்லது ஜாமீன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய அல்லது சட்ட நடவடிக்கைகளில் பங்கேற்க செல்லலாம்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...