பிரித்தானியாவுக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிக மோசமான காலகட்டம்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியா அடுத்த இரண்டு வாரங்களில் அதன் மோசமான காலகட்டத்தை எதிர்கொள்ள இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள அடுத்த 6 மாதங்களுக்கு பிரித்தானியா மொத்தமாக முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் அரசு முதன்மை மருத்துவர் ஜென்னி ஹாரிஸ்.

எதிர்வரும் ஈஸ்டர் பண்டிகை நாட்களில் கொரோனா வைரஸ் தாக்கம் பிரித்தானியாவில் உச்சத்தில் இருக்கும் எனவும் சில மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த வாரம் அரசு அறிவித்துள்ள நடவடிக்கைகளில் சில செப்டம்பர் இறுதி வரை அமுலில் இருக்க வேண்டும் என மருத்துவர் ஜென்னி ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த சில வாரங்கள் உச்சத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம், பின்னர் படிப்படியாக குறையும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இலையுதிர்காலத்தில், அதாவது செப்டம்பர் மாதத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 115 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இதனையடுத்து மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை 578 ஐ தொட்டுள்ளது. புதிதாக பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 2,129.

கொரோனாவால் பிரித்தானியாவில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் எண்ணிக்கை 11,658 என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்