கனடிய பிரதமர் மனைவியை சந்தித்த பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட லண்டன் நடிகர்! அவரின் தற்போதைய நிலை

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் Idris Elba மற்றும் அவர் மனைவி கொரோனாவாவால் பாதிக்கப்பட்டு மெக்சிகோவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் விரைவில் சொந்த ஊருக்கு செல்லவிரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் Idris Elba சில வாரங்களுக்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற We Day UK என்ற தொண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதே நிகழ்ச்சியில் கனடிய பிரதமரின் மனைவி Sophieவும் கலந்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை Sophie அப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இதன்பின்னர் Sophie கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சில நாட்கள் கழித்து Idris-ம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் மூலம் Idris-க்கு கொரோனா பரவியிருக்கலாம் என சமூகவலைதளத்தில் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது தற்போதைய நிலை குறித்து Idris தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நானும் என் மனைவியும் தற்போது நலமாக உள்ளோம்.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தான் இருவரும் இருக்கிறோம். எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தாலும், கொரோனாவால் சுவாசிப்பதில் எந்தவொரு பிரச்சனையும் பெரிதாக ஏற்படவில்லை.

லண்டனுக்கு விரைவில் போக விரும்புகிறேன், அது நடக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்