அச்சுறுத்தும் கொரோனா: பிரித்தானியாவில் 3 பெண் பிள்ளைகளுடன் தெருவில் தூங்கும் தாயார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

கொரோனா பரவலின் அபாயம் இருக்கும் நிலையில், பிரித்தானியாவில் தெருவில் வசித்துவரும் தாயார் ஒருவர் தமது 3 பிள்ளைகளுடன் உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இக்கட்டான சூழலில் தெருவில் வசிப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் 29 வயதான அந்த தாயார் தெரிவித்துள்ளார்.

புகலிடம் தேடி பிரித்தானியாவில் வந்துள்ள நிலையில், தமது நாட்டுக்கு தற்போதைய சூழலில் விமான சேவை ஏதும் இல்லாததால் திரும்பி செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் அவர்.

பெர்க்ஷயர் பகுதியில் தங்கியிருக்கும் தமக்கும் பிள்ளைகளுக்கும் தொண்டு நிறுவனம் ஒன்று உதவி வந்ததாகவும், ஆனால் நெடு நாட்கள் அவர்களால் உதவ முடியாது என தெரிவித்ததாகவும் அந்த தாயார் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நிர்வாகம் கூட தங்களைப் போன்றவர்களின் உதவிக்கு வரவில்லை என கூறும் அவர், கொரோனா பரவலே தமக்கு மேலதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

அவருடைய தற்போதைய விசாவில் பணிபுரிய அவர் அனுமதிக்கப்படவில்லை என்றும், உள்ளூர் அல்லது மத்திய அரசின் உதவிக்கு அவர் தகுதியானவர் இல்லை என்று ஏற்கனவே பலமுறை கூறப்பட்டதாகக் கூறுகிறார்.

எந்த உதவியும் கிடைக்காத நிலையில், தற்போது தமது மூன்று பிள்ளைகளுடன் தெருவில் தூங்குவதே பயமாக இருக்கிறது என்கிறார்.

தனது மூன்று குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தேடும் நம்பிக்கையில் தான் இங்கு பயணித்ததாக கூறும் அவர்,

அதே நேரத்தில் கடலில் பணிபுரியும் தமது கணவரால் ஒரு மாதத்திற்கு 600 பவுண்டுகள் மட்டுமே அனுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்