கொரோனாவுடன் நடக்கும் போராட்டம்! லண்டனில் இருக்கும் தமிழ் பெண் மருத்துவரின் அனுபவங்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 25,000-ஐ தாண்டிய நிலையில், லண்டனில் இருக்கும் தமிழ் பெண் மருத்துவர், கொரோனாவால் எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து பேசியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை 809,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,566 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் மட்டும், 25,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,789 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோயை கட்டுப்படுத்துவதற்காக அங்கிருக்கும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், லண்டனின் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ரிஸ்வியா மன்சூர் என்ற தமிழ் பெண் மருத்துவர் ஒருவர் அதில் இருக்கும் ஆபத்துகள் மற்றும் சவால்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில், நான் வேலை பார்க்கும் மருத்துவமனை மிகப் பெரிய மருத்துவமனை, இங்கு 13 வார்டுகள் இருக்கின்றன. அதில் 8 வார்டுகள் கொரோனா வைரஸ் வார்டுகளாக மாற்றியுள்ளார்கள், அதே போன்று 6 தீவிர சிகிச்சை பிரிவுகளில், 3-ஐ கொரோனா வைரஸ் தீவிர சிகிச்சை பிரிவாக மாற்றியுள்ளனர்.

நான் இப்போது கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இடத்தில் வேலை பார்க்கிறேன். எங்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் போராடி வருகிறோம். காலையில் வந்தவுடன், நாங்கள் எங்கள் உடைகளை எல்லாம் மாற்றம் வேண்டும். ஒரு முறை வார்டின் உள்ளே நாங்கள் சென்றுவிட்டால், ஷிப்ட் முடியும் வரை வார்டை விட்டு வெளியில் வரக்கூடாது.

நமக்கு தேவையான சாப்பாடு, டீ போன்ற தேவையானவைகளை நாம் வாங்கி வைத்து கொள்ள வேண்டும். நோயாளிகளை பார்க்கும் போது, மிகவும் பாதுகாப்பாக உடை அணிந்திருக்க வேண்டும், அது மிகவும் கடினமாக(இறுக்கமாக) இருக்கும். ஏனெனில் இது முன்னெச்சரிக்கை.

நாங்கள், அதாவது மருத்துவர்கள் நோயாளிகளின் நிலையை பார்த்து, அதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று வந்துவிடுவோம். ஆனால் அங்கிருக்கும் செவிலியர்கள், நோயாளிகளுக்கு தேவையான சாப்பாடு, உடை மாற்றுவது மற்றும் இன்னும் சில விஷயங்கள்.

BBC

இதன் காரணமாக செவிலியர்கள் சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது, ஒரு சிலரால் வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது. முதலில் ஐந்து நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் இருந்தார், ஆனால் இப்போது அது அப்படியே இரண்டாக, 10 நோயாளிக்கு ஒரு செவிலியர் என்று இருக்கிறார்.

இதனால் அவர்களால் அந்த வேலையை பார்க்க முடியவில்லை, நாங்கள் தான் உதவி செய்வோம். நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம், ஆக, ஆக அவர்களை கவனித்து வரும் Health Care நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பும் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இவர்கள் நல்ல நிலையில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாங்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றால், தனியாகவே உட்கார்ந்திருப்போம்.

BBC

ஏனெனில் எதாவது ஒரு இடத்தில் வைரஸ் இருக்குமோ என்ற பயத்தினால் குளித்துவிட்டு, தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். இது தனித்து இருப்பதை போன்று உணர்த்தும், நாங்கள் அப்படி மீறி பேச நினைத்தால், அவர்களுக்கு ஏதேனும் பாதித்துவிடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை.

இதில் இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாட்டில், இதை எப்படி கட்டுப்படுத்துவது, அது எவ்வளவு கடினம் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் மக்களே நாம் தெரியாது ஒரு எதிரியுடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால், அது மிகவும் நன்றாக இருக்கும், அதுமட்டுமே சிறந்த வழி என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்