லண்டனில் கொரோனாவால் உயிரிழந்த 13 வயது பள்ளி சிறுவன்! குடும்பத்தினர் சொன்ன அறிகுறி

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 13 வயது பள்ளி மாணவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் தெற்கு லண்டனின் Brixton-ஐ சேர்ந்த Ismail Mohamed Abdulwahab என்ற 13 வயது சிறுவன் கொரோனா வைரஸிற்கான நேர்மறை சோதனையை பெற்றிருந்தான்.

இந்நிலையில் அவன் உயிரிழந்துவிட்டதாக King's College மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

புற்றுநோயால் தங்கள் தந்தையை இழந்த அவரது பேரழிவிற்குள்ளான குடும்பம், இப்போது Ismail Mohamed Abdulwahab இழப்பால் மிகுந்த சோதனையில் உள்ளது.

குடும்பத்தினர் கூறுகையில், அவனுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது, இதன் காரணமாக King's College மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஒரு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு பின்னர் கோமாவில் வைக்கப்பட்டார், ஆனால் நேற்று காலை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் Ismail Mohamed Abdulwahab-க்கு உடல் அளவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் இருந்துள்ளது. பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிந்தோரின் எண்ணிக்கை தற்போது வரை 1,789-ஐ தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்