12,750லிருந்து 25,000-ஆக உயர்த்துவதே பிரித்தானியாவின் முக்கிய இலக்கு..! வீட்டுவசதி அமைச்சர் தகவல்

Report Print Basu in பிரித்தானியா

கொரோனா வைரஸிற்கான சோதனைகளின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 25,000 ஆக உயர்த்த பிரித்தானியாக இலக்காக வைத்துள்ளது என்று வீட்டுவசதி அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் கொரோனாவல் 1,789 உயரிழந்துள்ள நிலையில் 25,150 பேரக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போது பிரித்தானியாவில் 12,750 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் மாத்தின் நடுப்பகுதியில் அதை ஒரு நாளைக்கு 25,000 ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாக ஜென்ரிக் கூறினார்.

மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மட்டுமின்றி கூடுதலாக மருத்துவ ஊழியர்களையும் பிரித்தானியா பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது.

ஆனால் போதுமான அளவு அல்லது பரந்த அளவில் பரிசோதனையை விரிவுபடுத்தவில்லை என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

திங்களன்று 8,240 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், வார இறுதியில் 900 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் ஜென்ரிக் கூறினார்.

இப்போது ஒவ்வொரு நாளும் 12,750 பேரை பரிசோதிக்கும் திறன் உள்ளது, மருத்துவ ஆலோசனையின் பேரில், மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு தேவையானது குறித்து நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

சில நாட்களில் எங்களது தற்போதைய திறன் 12,750லிருந்து 15,000 வரை உயரும் என்று நாங்கள் நினைக்கிறோம், எனவே இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆனால் இன்னும் நாம் ஏதிர்பார்த்த அளவுக்கு இல்லை, பின்னர் ஏப்ரல் நடுப்பகுதியில் 25,000 ஆக உயர்த்த இலக்காக வைத்துள்ளதாக ஜென்ரிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்