கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலே உயிரிழக்க கைவிடப்படுவார்கள்..! கசிந்த அதிர வைக்கும் கடிதம்

Report Print Basu in பிரித்தானியா

வேல்ஸ் நாட்டில் அறுவை சிகிச்சை மையம் ஒன்றிலிருந்து நோயாளிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நோயாளிகள் கார்டியோ நுரையீரலை மீண்டும் இயக்க முயற்சிக்க வேண்டாம் (டி.என்.ஏ.சி.பி.ஆர்) என்ற படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

குணப்படுத்த முடியாத புற்றுநோய், மோட்டார் நியூரோன் நோய் மற்றும் சிகிச்சை அளிக்க முடியாத இதயம் மற்றும் நுரையீரல் நிலைமைகள் போன்ற கடுமையான உடல்நலக் குறைபாடுள்ள குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு மார்ச் 27 அன்று தென் வேல்ஸின் மாஸ்டெக்கில் உள்ள லின்ஃபி அறுவை சிகிச்சை மையம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அடையாளத்தை வெளியிட விரும்பாத 60 வயதுடைய நோயாளி ஒருவர் குறித்த கடிதத்தை வெளியிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கடிதம் ஏற்படுத்திய எந்தவொரு துயரத்திற்கும் மூத்த என்.எச்.எஸ் தலைவர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர், ஆனால் கோடிட்டுக் காட்டப்பட்ட திட்டங்களை மறுக்கவில்லை.

கடிதத்தில், கொரோனா வைரஸுடன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், சில கடுமையான நிலைமைகளைக் கொண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் நிச்சயமாக வென்டிலேட்டர் படுக்கை வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

நோயாளிகள் டி.என்.ஏ.சி.பி.ஆர் படிவத்தை பூர்த்தி செய்ய விரும்புகிறோம், கொரோனா தொற்று அல்லது நோய் காரணமாக உங்கள் உடல்நிலை திடீரென மோசமடைந்துவிட்டால் அவசர சேவைகள் அழைக்கப்படாது மற்றும் உங்கள் இதயத்தை அல்லது சுவாசத்தை மீண்டும் இயக்க முயற்சிக்கப்படாது.

கொரோனா நோய்த்தொற்றின் விளைவாக குறிப்பிட்டுள்ள நிலைமைகள் உள்ளவர்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வயது, உடல்நலம் மற்றும் உடற்தகுதியை பொறுத்தது.

எங்களிடமிருந்தும் சமூக நர்சிங் சேவைகளிடமிருந்தும் தொடர்ந்து வரும் ஆதரவோடு தங்கள் குடும்பத்தினரால் பராமரிக்கப்படுவதற்காக வீட்டிலேயே இருக்க வேண்டும் இதுவே நோயாளிகளுக்கு ‘சிறந்த வழி’.

கடுமையான சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் நோயாளிகள் உட்பட கொரோனா வைரஸிலிருந்து அதிக ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் நபர்கள், வைரஸுடன் தொடர்பு கொள்ளாமல் பாதுகாக்க 12 வாரங்களுக்கு சுய-தனிமைப்படுத்துமாறு கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் உங்களை கைவிட மாட்டோம், ஆனால் அடுத்த சில மாதங்கள் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி நாங்கள் வெளிப்படையாகவும் யதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

mirror

Cwm Taf Mornnwg பல்கலைக்கழக சுகாதார வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, லின்ஃபி அறுவை சிகிச்சையிலிருந்து சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

கடிதத்தைப் பெற்ற சில நோயாளிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இது எங்கள் நோக்கம் அல்ல, எந்தவொரு துன்பத்திற்கும் லின்ஃபி அறுவை சிகிச்சை மன்னிப்பு கேட்கிறது.

லின்ஃபி அறுவை சிகிச்சையின் பணியாளர்கள் கடிதத்தைப் பெற்ற நோயாளிகளிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கபார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்