கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க 2 பவுண்டுகள் விலையில் உடனடி சோதனை: பிரித்தானிய ஆய்வாளர் கண்டுபிடிப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனா தொற்றை ஐந்து நிமிடங்களுக்குள் கண்டுபிடிக்கும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார் பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர்.

பிரித்தானியாவின் Hull என்ற இடத்திலுள்ள Biocel Analytics என்ற நிறுவனம், கொரோனா தொற்றை ஐந்து நிமிடங்களுக்குள் கண்டுபிடிக்கும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இப்போதுள்ள கொரோனா அறியும் சோதனைகள் 48 மணி நேரத்திற்கு பிறகே சோதனை முடிவுகளைக் கொடுக்கும்.

ஆனால், Biocel Analytics நிறுவனத்தின் பேராசிரியர் Maneesh Singh என்பவர், தான் கொரோனா அறியும் ஒரு பரிசோதனையைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதற்கு 2 பவுண்டுகள் மட்டுமே செலவாகும் என்றும், ஐந்து நிமிடங்களுக்குள் சோதனை முடிவுகள் வெளியாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

தான் கண்டுபிடித்துள்ள சோதனை, infrared microspectroscopy என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் லாப நோக்கில் இதை செய்யவில்லை என்று கூறும் Maneesh Singh, பெரும் சிக்கலான ஒரு நேரத்தில் நாடு இருக்கும்போது, ஒரு அறிவியல் சாதனையை படைப்பதைப் பொருத்தது இது என்கிறார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்