புதிய கொரோனா சட்டத்தை மீறியதால் ரயில் பயணி ஒருவருக்கு அபராதம் விதித்த பிரித்தானிய பொலிசார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் புதிய கொரோனா சட்டத்தை மீறியதாக கூறி, பெண்மணி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூகேஸில் ரயில் நிலையத்தில் இருந்தே குறித்த பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

41 வயதான Marie Dinou என்பவர் சம்பவத்தின் போது பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும்,

இதனையடுத்து அவர் மீது புதிய கொரோனா சட்டத்தை மீறியதாக கூறி வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் பயணச்சீட்டு மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த நிலையிலும், அவர் நியூகேஸில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த காரணத்தை வெளியிட மறுத்துள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு அபராதமாக 660 பவுண்டுகள் விதித்துள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமுலில் உள்ளதால மிக மிக அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே பயணப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய சட்டத்தை மீறியதாலும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலும் குறித்த பெண்மணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்