லண்டனில் தற்காலிக சவக்கிடங்கு! கொரோனா தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... புகைப்படங்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனின் Newham-ல் தற்காலிக சவக்கிடங்கு அமைக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்பதாலேயே சவக்கிடங்கு அமைக்கப்படுவதாக Newham மேயர் Rokhsana Fiaz கூறியுள்ளார்.

இந்த சவக்கிடங்கு இந்த வாரத்தில் பயன்பாட்டுக்கும் முழுவதும் தயாராகிவிடும் என தெரியவந்துள்ளது.

இது குறித்து Rokhsana Fiaz கூறுகையில், கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் தான் அரசாங்கத்தின் எண்ணம் படி தற்காலிக சவக்கிடங்கு இங்கு அமைக்கப்படுகிறது.

உயிரிழப்பவர்களின் சடலங்கள் புதைப்படுவதற்கு மற்றும் எரிக்கப்படுவதற்கு முன்னர் இந்த இடத்தில் வைக்கப்படும்.

ஆனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இந்த இடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதே போல உயிரிழந்தவர்களின் சடலம் அருகில் அவர்களின் உறவினர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஏனெனில் அதன் மூலமாக கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்