ஒட்டு மொத்த நாடும் பெருமிதம் கொள்கிறது! தொலைப்பேசியில் இளவரசர் வில்லியம்-கேட்: பாராட்டிய மக்களின் வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தொலைப்பேசி மூலம் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி சொன்ன ஓடியோவை கிங்ஸ்டன் அரண்மனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,718-ஐ தொட்டுள்ளதுடன், 2,921 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், இது மிகவும் சோகமான நாள் என்று நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இன்று இந்த கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், போராடி வரும் மருத்துவ ஊழியர்களை பாராட்டும் விதமாக மக்கள் வெளியில் வந்து கைதட்டி நன்றி தெரிவித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் இது போன்று மக்கள் மாலை நேரத்தில் தாங்கள் இருக்கும் வீட்டில் இருந்த படியே கைதட்டி நன்றி என்.ஹெச்.எஸ் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் The Duke & Duchess of Cambridge மருத்துவமனை மற்றும் Queens Hospital & University Hospital Monklands-ல் இருக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தனர்.

அதில், முழு நாடும் உங்களால் பெருமிதம் கொள்கிறது, எனவே நீங்கள் செய்கிற எல்லாவற்றிற்கும் மற்றும் நீங்கள் செலுத்தும் அனைத்து மணிநேரங்களுக்கும் எங்களின் நன்றி என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆடியோவை கிங்ஸ்டன் அரண்மனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்