கதவை திறக்காவிட்டால் கைது செய்துவிடுவேன்... மிரட்டிய ’சுகாதாரத்துறையினர்’: பின்னர் நடந்த வேடிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சமீப காலமாக கொரோனா தனிமைப்படுத்துதலை பயன்படுத்திக்கொண்டு மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

பிரித்தானியாவில் சுகாதாரத்துறையிலிருந்து வந்திருப்பதாகக் கூறி, ஒரு 83 வயது பெண்மணியின் வீட்டை ஒருவர் தொடர்ந்து பலமாக தட்டியுள்ளார்.

அந்த பெண்மணி கதவைத் திறக்க தாமதிக்கவே, வீட்டை சோதனையிடுவதற்காக தான் வந்துள்ளதாகவும், கதவைத் திறக்காவிட்டால் கைது செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார் அந்த நபர்.

அந்த பெண்மணி கதவைத் திறந்ததும் வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர், உண்மையில் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர் அல்ல, ஒரு திருடன்!

GETTY IMAGES

அந்த திருடன் 220 பவுண்டுகள் கொடுக்குமாறு அந்த பெண்மணியை மிரட்டியுள்ளான். ஆனால், அந்த பெண்மணியிடம் மொத்தமே 20 பென்னிதான் இருந்துள்ளது.

ஆகவே, ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளான் அந்த திருடன். நல்ல வேளையாக அந்த பெண்மணியை அவன் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டான்.

கொரோனா தனிமைப்படுத்துதலைப் பயன்படுத்திக்கொண்டு இதுபோல் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்