மாஸ்க் அணியவேண்டுமா இல்லையா: அமெரிக்கர்களிடமிருந்து மாறுபடும் பிரித்தானியர்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அனைவரும் மாஸ்க் அணியவேண்டுமா இல்லையா என்பதில் பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்கும் வித்தியாசமான கருத்துகள் நிலவுகின்றன.

மாஸ்குகள் கொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்காது என பிரித்தானியர்களுக்கு கூறப்படும் நிலையில், அமெரிக்காவோ, அனைத்து குடிமக்களும் மாஸ்க் அணியவேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

பிரித்தானிய சுகாதாரத்துறை செயலர் Matt Hancock, மாஸ்க் அணிவது குறித்த பிரித்தானியர்களின் அணுகுமுறையில் மாற்றமில்லை என்றார்.

மாஸ்குகள் சாதாரண மக்களுக்கு உதவும் என்பதற்கு பெரிய அளவில் ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறிய அவர், அவற்றை சுகாதாரத்துறை ஊழியர்களும், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களும் பயன்படுத்துவதே சரியாக இருக்கும் என்றார்.

உலக சுகாதார அமைப்பும் தற்போதைக்கு ஆரோக்கியமாக இருப்போர் மாஸ்க் அணிவதற்கு பரிந்துரைக்கவில்லை என்றாலும், தனது கருத்தை மறுபரிசீலனை செய்துவருவதாக தெரிவித்துள்ளது.

ஆனால், நியூயார்க் மக்கள் அனைவரும், மாஸ்க் கிடைக்காவிட்டால், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, வீட்டில் செய்யப்பட்ட ஒரு துணியாலான மாஸ்கையாவது கொண்டு வாயை மூடிக்கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்