எந்த காரணமும் இன்றி மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு 12 வார சிறை: பிரித்தானியாவில் முதல் சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

சரியான மருத்துவ காரணமின்றி மருத்துவமனைக்குச் சென்றதற்காக பிரித்தானியாவில் முதல் முறையாக நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீனாவை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் கடுமையாக சோதித்து வருகிறது.

நாளுக்கு நாள் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மரண எண்ணிக்கை எகிறி வருகிறது.

இந்த நிலையில் பிரித்தானியரான 32 வயது கீரன் ஸ்டீவன்சன் என்பவர், மருத்துவமனை ஒன்றில் சென்று அங்குள்ள நிஜ அவஸ்தை என்ன என்பதை தெரிவிக்க இருப்பதாக திங்களன்று தமது பேஸ்புக் நேரலையில் வீரவாதம் முழக்கியுள்ளார்.

மட்டுமின்றி பக்கிங்ஹாம்ஷையரின் அய்லெஸ்பரியில் உள்ள ஸ்டோக் மாண்டேவில் மருத்துவமனைக்கு எவ்வித மருத்துவ காரணங்களும் இல்லாமல் சென்று திரும்பியுள்ளார்.

தொடர்ந்து தமது பேஸ்புக் பக்கத்தில் தற்பெருமை பேசியதுடன், மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு இல்லாதது தொடர்பில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த தகவல் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனை கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் கைது செய்ததுடன்,

ஆக்ஸ்போர்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 12 வாரம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டுமின்றி NHS அறக்கட்டளைக்கு அவர் 300 பவுண்டுகள் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்