பிரித்தானியா ஹீரோக்களுக்கு இளவரசி அனுப்பிய பொருட்கள்! அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி புகைப்படங்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் என்.ஹெச்.எஸ் ஹீரோக்களுக்கு இளவரசி யூஜெனி அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் இருக்கும் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். அதற்கிடையில் அந்த வைரஸிற்கு எதிராக என்.ஹெச்.எஸ் ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

இந்த வைரஸ் எளிதாக பரவும் தன்மை கொண்டதால், மிகுந்த எச்சரிக்கையுடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், களத்தில் இறங்கி வேலை பார்த்து வரும் இவர்களை அந்நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் ஹீரோக்கள் எண்று குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இளவரசி Eugenie(29) சமீபத்தில், NHS நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பெட்டிகளை வழங்கி வருகிறார்.

அது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மேற்கு லண்டனில் உள்ள Hammersmith மருத்துவமனைக்கு வழங்கிய புதிய பழம் மற்றும் காய்கறி போன்றவற்றால் நிரப்பப்பட்ட பெட்டிகளின் படங்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும், ஒரு புகைப்படத்தில், Eugenie, நீங்கள் அனைவரும் ஹீரோக்கள். மற்றவர்களுக்கு உதவுவதற்காக நீங்கள் முன் நிற்கிறீர்கள் நன்றி, தொற்றுநோயின் முன் வரிசையில் பணிபுரியும் அனைவருக்கும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்குவதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

உணவு பொருட்கள், கழிப்பறைக்கு பயன்படுத்தப்படும் காகிதம் மற்றும் துப்புரவு பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பராமரிப்புப் பெட்டிகளை புதன்கிழமை மற்றும் பின்னர் சனிக்கிழமை அவர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்