பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு... இந்த வார இறுதியில்? கொரோனா குறித்து சுகாதார செயலாளர் எச்சரிக்கை

Report Print Santhan in பிரித்தானியா
1740Shares

நோய் இன்னும் பரவி வருவதால், பிரித்தானியர்கள் வீட்டிற்குள்ளே இருங்கள், தனிமைப்படுத்தி கொள்ளுங்கள், இது கோரிக்கையாக அல்ல என்று நாட்டின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் Matt Hancock தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நாட்களை முடித்தார்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வாரத்தின் இறுதியில் சில பகுதிகளில் வெப்பமான வானிலை(வெயில்) இருக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டாலும், நோய் இன்னும் பரவி வருகிறது என்று எச்சரித்துள்ளார்.

நோயின் தாக்கம் இருப்பதால், இதன் காரணமாக நாங்கள் நாட்டின் சில பகுதிகளை வார இறுதியில் அமைக்கவிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி இப்போதைக்கு சமூகவிலகல்களை தளர்த்த முடியாது. அப்படி நாங்கள் செய்தால் மக்கள் இறக்க நேரிடும்.

.இதனால், வீட்டிலே இருங்கள், உயிரை பாதுகாத்து கொள்ளுங்கள், நாட்டிற்காக நீங்கள் உங்களின் பங்களிப்பை செய்யுங்கள், இந்த ஆலோசனையை நாங்கள் கோரிக்கையாக சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இங்கிலாந்தில் இன்னும் 2,000-க்கும் மேற்பட்ட முக்கியமான பராமரிப்பு படுக்கைகள் பயன்படுத்தப்படுவதை விளக்கிய அவர், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தற்போதுள்ள மருந்துகளை எவ்வாறு மாற்ற முடியும் என்பதைப் பார்க்க இங்கிலாந்து மூன்று தேசிய மருத்துவ பரிசோதனைகளை அமைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இங்கிலாந்தின் தலைமை செவிலிய அதிகாரி Ruth May கூறுகையில்,இந்த வார இறுதியில் மிகவும் சூடாக(வானிலை) இருக்கும். இது வெளியே சென்று அந்த கோடைகால கதிர்களை அனுபவிக்க மிகவும் தூண்டுதலாக இருக்கும்.

ஆனால் தயவுசெய்து அப்படி மட்டும் செய்துவிடாதீர்கள், வீட்டிற்குள்ளே இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்