குழந்தைகளைக் குறித்து கவலைப்படாதே என்று கூறிய கணவன்.. கண்ணீருடன் பிரிந்த பிரித்தானிய செவிலியரின் உயிர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 16 ஆண்டுகள் செவிலியராக பணியாற்றிய இளம் தாய் ஒருவருக்கு கொரோனா தொற்றிய நிலையில், அவரது கணவர் குழந்தைகளைக் குறித்து கவலைப்படாதே என்று கூறிய மறுகணம் அவரது உயிர் பிரிந்துள்ளது.

West Midlandsஇலுள்ள Walsall Manor மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த Areema Nasreen (36), கொரோனா தொற்றால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்திருக்கிறார்.

8, 10, மற்றும் 17 வயதுடைய மூன்று குழந்தைகளைப் பிரிய முடியாமல் அந்த உயிர் துடித்ததோ என்னவோ! அப்போது, Areemaவின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டாரோ என்னவோ, அவரது கணவர் மெல்ல மனைவியின் காதருகில் குனிந்து, குழந்தைகளைக் குறித்து கவலைப்படாதே என்று கூறியிருக்கிறார்.

உடனே Areemaவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்திருக்கிறது. மனைவியை கட்டியணைத்து தேற்ற முயன்றிருக்கிறார் கணவர்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவ்வாறு செய்யவேண்டாம் என மருத்துவர்கள் கணவரை தடுத்திருக்கிறார்கள்.

இருந்தும், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி மனைவியை கணவர் அணைத்துக்கொள்ள, Areemaவின் உயிர் பிரிந்திருக்கிறது. மூன்று குழந்தைகளுக்கு தாயான Areemaவின் மரணம் அவரது குடும்பத்தாரிடையே கடும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Areema, பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான மருத்துவப்பணியாளர்களில் மிகவும் இளம் வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்