பிரித்தானிய இளவரசியின் மாமனார் கொரோனாவால் தீவிர சிகிச்சையில்: கவலையில் அரச குடும்பம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி யூஜினின் மாமனார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி யூஜினின் மாமனாரான 71 வயது ஜார்ஜ் ப்ரூக்ஸ்பேங்க் என்பவரே தற்போது கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

ஆனால் அவரது நிலை ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இளவரசி யூஜினின் குடும்ப உறுப்பினர்கள் கவலையில் காணப்படுவதாக கூறப்படுகிரது.

கொரோனாவால் பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர்கள் பலரும் சுய தனிமைப்படுத்தலில் உட்பட்டு வருகின்றனர்.

சமீபத்திலேயே பட்டத்து இளவரசர் சார்லஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஒரு வார கால தனிமைப்படுத்தலுக்கு பின்னர் குணமடைந்துள்ளார்.

ராணியாரும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் ரத்து செய்து தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

இந்த நிலையிலேயே தெற்கு லண்டனில் அமைந்துள்ள வாண்ட்ஸ்வொர்த்தில் வசித்துவரும் 71 வயது ஜார்ஜ் ப்ரூக்ஸ்பேங்க் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்