இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரபல பிரித்தானிய மருத்துவர் கொரோனா தொற்றால் பலி!

Report Print Abisha in பிரித்தானியா
571Shares

இந்தியாவில் பிறந்த பிரித்தானிய மருத்துவர் ஜித்தேந்தரா ரத்தோட் கொரோனா தொற்றால் பலியாகினார்.

58வயதே ஆன ஜித்தேந்தரா இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாவார். இவர், இதய அறுவைசிகிச்சை பிரிவில் சிறந்து விளங்கினார்.

அவர், மரணத்திற்கு வேல்ஸ் சுகாதாரத்துறை சார்பாக இரங்கல் தெரிவித்ததுடன். ஒரு நல்ல இதய அறுவைசிகிச்சையாளரை தவறவிட்டோம் என்று வருத்தம் தெரிவித்துள்ளது.

இறப்பு குறித்து அவரது நண்பர் தெரிவிக்கையில் “ஜித்தேந்தரா சிறந்த ஆர்வமிக்க இதய அறுவைசிகிச்சையாளர். அவர், அனைவரையும் சிறப்பாக நடத்தும் மனிதராக இருந்தார். மேலும், சிறந்த மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்