இதற்கு முன்பு இப்படி பார்த்ததில்லை! பிரித்தானியாவில் கொரோனா வைரசுடன் போராடும் NHS ஊழியர்களின் காட்சிகள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா வைரசுடன் என்.எச்.எஸ் ஊழியர்கள் போராடி வரும் நிலையில், இது போன்று இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,242-ஐ தொட்டுள்ளதுடன், 6,159 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸின் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் லண்டனில் இருக்கும் மருத்த்துவமனை ஒன்றில் என்.எச்.எஸ் ஊழியர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் எந்தளவிற்கு கொரோனா வைரசுடன் போராடி வருகின்றனர் என்பதை காட்டும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

உடல் முழுவதும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்கும் மருத்துவர்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு Red zone(ஆபத்தில் இருப்பவர்கள்), அதாவது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் வெண்டிலேட்டர்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இப்படி நோயாளிகளை ஊழியர்கள் கவனிக்கும் போது, அவர்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தால் பாதிக்கப்படும் போது, அவர்கள் சமாளிக்க சிரமப்படுவதாகவும், அதே சமயம் சிலர் பீதியின் காரணமாக பாதிக்கப்படுவதாக அங்கிருக்கும் ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அங்கிருக்கும் மருத்துவர்கள் 60 மணி நேரங்கள் மற்றும் வாரங்கள் என நீடித்து, தங்களால் இயன்ற வேலையை செய்வதற்கு உறுதியாக உள்ளனர்.

பிரபல ஊடகமான BBC ஊடகத்திற்கு தீவிரசிகிச்சை பிரிவில் இருந்து வரும் Elaine Thorpe என்பவர் கூறுகையில், நான் சுமார் 23 ஆண்டுகளாக தீவிர சிகிச்சை செவிலியராக இருக்கிறேன், இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை, லண்டன் குண்டுவெடிப்பு கூட, இது போன்ற நிலையை கண்டதில்லை.

மக்கள் அரசாங்கத்தின் விதிகளை பின்பற்றாமல், அதில் கவனம் செலுத்தாமல் இருக்கும் வரை இந்த சுகாதார நெருக்கடி தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவின் பராமரிப்பு ஆலோசகரான மருத்துவர் Jim Down, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வருகை முற்றிலும் கற்பனை செய்ய முடியாத ஒன்றாக உள்ளது. அதே சமயம் சுகாதார சேவையை சமாளிக்க அந்தளவிற்கு உபகரணங்கள் இல்லை. இதை சமாளிப்பது கடினம், முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் வயதானவர்களுக்கு மட்டும் ஆபத்தானதாக இல்லை, அவசர சிகிச்சை பிரிவிற்கு வரும் நாற்பது முதல் எழுபதுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர். ஏனெனில் இளமையானவர்களும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை குறிப்பிட்ட மருத்துவமனையில் கொரோனா வைரஸால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிருக்கும் நோயாளிகளை காப்பாற்றுவதற்கு அங்கிருக்கும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். வெண்டிலேட்டர்களை எப்போதும் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில் நோயாளிகளின் நுரையீரல் சரியாக வேலை செய்வதை நிறுத்தும் போது, இந்த வெண்டிலேட்டர்கள் தான் சீராக சுவாசிக்க வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்