கொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய்! ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை ஐ.எஸ் அமைப்பு, இது அல்லாவின் சிப்பாய் என்று குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை உலக அளவில் 1,468,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 85,443 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் மட்டும் 55,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதை ஒரு சூழ்நிலையாக பயன்படுத்தி, ஐ.எஸ் பயங்கவாத குழு ஒரு வலிமையான அமைப்பை உருவாக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஏனெனில், தற்போது ஐ.எஸ். அமைப்பினர் வெளியிட்டிருக்கும் குறிப்பில், கொரோனா வைரஸ், அல்லாவின் சிப்பாய் என்று குறிப்பிட்டுள்ளது.

அதில், சிகாகோ மற்றும் லண்டனில் இருக்கும் டவர் பாலத்தின் புகைப் படங்களை குறிப்பிட்டு, அச்சுறுத்தலான வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளது.

அதாவது, அவர்கள் அதை எதிர்பார்க்கும் போது, அவர்களை அடியுங்கள், கொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஐ.எஸ் பிரச்சாரகாரகர்கள், மேற்கு உலகில் இருக்கும் கடவுளின் கோபமே கொரோனா வைரஸ் என்று பரப்பி வருவதாக எஸ்.ஐ.டி புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பயங்கரவாத குழு, கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயால், பாதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கொடிய தாக்குதல்களை திட்டுவதற்கும் வழி வகுக்கலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்