இன்னும் மூடி மறைப்பது முறையல்ல... பிரித்தானியாவில் 80% பேர் கொரோனாவுக்கு இலக்காவார்கள்: அரசாங்க ஆலோசகர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் இதே நிலை நீடித்தால் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனாவுக்கு இலக்காவார்கள் என அரசாங்க ஆலோசகர் Rupert Shute தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஆலோசகரின் குறித்த கருத்துக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்தும், அரசு, அதிகாரிகள் தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

வியாழனன்று பாஸ்போர்ட்டு அலுவலக ஊழியர்களுடன் கலந்துரையாடிய Rupert Shute, இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இனி நீங்கள் பயப்பட தேவை இல்லை என கூறிய அவர், உங்கள் குடியிருப்புகளில் இனி பத்திரமாக இருக்கலாம் அல்லது பல்பொருள் அங்காடிகளில் உங்களை இனி காண நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.

இதுவரை கொரோனாவுக்கு இலக்காகாத நம்மில் பலரும், அல்லது மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இலக்காகலாம் என்றார் Rupert Shute.

இனி இந்த தகவல்களை மூடி மறைப்பதில் பலனில்லை என குறிப்பிட்ட அவர், ஆனால் அதை குறைக்கும் தீவிர பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நெறிமுறைகளை மீறிய இந்த கருத்து கண்டிப்பாக கண்டனத்துக்கு உரியது என தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்