லண்டனில் பெரிய குடும்பமாக ஒரே தெருவில் வசித்தனர்! ஆணிவேரமாக திகழ்ந்தவர் கொரோனாவால் பலி... புகைப்படங்களுடன் முழு தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் தனது மொத்த குடும்பத்துடன் ஒரே தெருவில் வசித்து வந்த நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் அது தொடர்பில் அவர் மகன் உருக்கமாக பேசியுள்ளார்.

சுபாஷ் சந்திரா ஷர்மா (63) என்ற நபர் கடந்த மாதம் 14ஆம் திகதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

சுபாஷுக்கு மூன்று சகோதரர்கள் உள்ள நிலையில் அனைவரும் ஒரே தெருவில் குடும்பமாக அருகருகில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

சுபாஷின் மகன் கெளரவ் கூறுகையில், என் தந்தைக்கு எப்போதும் உடல்நலக்குறைவே ஏற்படாது.

ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது, ஏனெனில் அவர் தான் எங்கள் குடும்பத்தின் ஆதாரமாக இருந்தார்.

பின்னர் அவர் உடல்நிலை மோசமடைந்து மீண்டும் சீரடைந்தது. இதே போல சில தடவை ஆன நிலையில் இறுதியாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சீராக இருந்தார், பின்னர் திடீரென்று மோசமான நிலைக்கு திரும்பினார்.

மேலும் என் தந்தை சுபாஷ் வாழ்க்கையின் இறுதி நிமிடத்தின் போது அவரை சிரமம் இன்றி வைக்கப்போவதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

என் தந்தையின் இறுதி நிமிடத்தில் நான் உட்பட குடும்பத்தார் யாரும் உடன் இருக்க முடியவில்லை, ஏனெனில் மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கையே அதற்கு காரணம்.

என் குழந்தையுடன் சுபாஷ் அன்பாக விளையாடுவார், அவருக்கு நீரிழிவு நோய் இருந்தபோதிலும், அவர் அதை திறனுடன் எதிர்கொண்டார், பேரன் ரன்வீர் பிறந்த பிறகு அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எடுக்க தீவிரமாக முடிவெடுத்தார்.

அவர் இறந்து ஐந்து வாரங்கள் ஆகியும் இன்னும் இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை. கொரோனா கட்டுபாடுகளால் வரும் 21ஆம் திகதி தான் இறுதிச்சடங்கு செய்யயப்படவுள்ளது.

நான் தற்போது வேறு இடத்தில் இருப்பதால் தாய்க்கு கூட ஆறுதல் சொல்லமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்