லண்டனில் இருந்து திரும்பிய விதவை தாய்! விமான நிலையத்தில் மகளை பார்த்தவுடன் தவித்த உணர்ச்சிமிகு காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் இருந்து துபாய் திரும்பிய தாய், தன் கணவனை பறிகொடுத்த நிலையில், விமான நிலையத்தில் மகளை கண்டவுடன் கண்ணீர்விட்டு அழுத வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் சொந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு சென்ற பலரும், அங்கு சிக்கி, சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

Inayat, Hadiya, Mustafa மற்றும் Sabeena( Image Credit: Supplied)

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த விதவை தாய் Sabeena Dhalla தன் கணவனை பறிகொடுத்த நிலையில், அதன் பின் திங்கட்கிழமை துபாய் விமானநிலையத்தில் தன் மகளை பார்த்தவுடன் கண்ணீர்விட்டு அழுதார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Sabeena Dhalla பிரித்தானியாவின் Leicester-ல் இருக்கும் தன்னுடைய நோய்வாய்ப்பட்ட தாயை கவனிக்க சென்றுள்ளார்.

இதற்கிடையில் இவரின் கணவரான Inayat Ali Dhalla, ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து தனது சொந்த நாடான Tanzania-வுக்கு இரண்டு நாள் வணிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

gulfnews

அப்போது அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, வெண்டிலேட்டரில் கவனிக்கப்பட்டு வந்தார். இருப்பினும் கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் திகதி, அவர் இறந்துவிட்டார். இந்த செய்தியை அங்கிருக்கும் அவரின் மகன் Mujtaba தன்னுடைய தயான Sabeena Dhalla-விடம் கூறியுள்ளார்.

இதனால் அவர் துபாயில் தந்தையை இழந்த வேதனையில் தனியாக இருக்கும் தன்னுடைய மகளான Hadiya(17)-வை பார்ப்பதற்கு அரசின் உதவியை நாடியுள்ளார். அதன் படி லண்டன் ஹீத்ரோ விமன நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் திங்கட் கிழமை துபாய் விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளார்.

அப்போது தன் மகளை பார்த்தவுடன் எதுவும் பேசமுடியாமல், உணர்ச்சிவசத்தில் கண்கலங்கினார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், இருவரும் சமூக இடைவெளியை பின்பற்றி கண்கலங்கினர்.

gulfnews

அந்த வீடியோவை பிரபல ஆங்கில ஊடகமான கல்ப்நியூஸ் வெளியிட்டுள்ளது. அதில், Sabeena Dhalla, நான் என் மகளை பார்த்தவுடனே கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அது என்னால் முடியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்